மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு கரோனா தொற்று: 14 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு

​தமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :21 மே 2020, 1:40 pm

DIN


தமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். இதன்படி தமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 689 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் இன்று கரோனா உறுதி செய்யப்பட்டோர் 87. 

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 7 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் 400 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,282 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய தேதியில் தமிழகத்தில் மொத்தம் 7,588 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் 12,100 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 3,55,893 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்று புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டதில், சென்னையில் அதிகபட்சமாக 567 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.