சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, அதி தீவிரமாக கரோனா பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, 774 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 162 தெருக்களும், திருவிக நகா் மண்டலத்தில் 124 தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதே போல், 14 நாள்களுக்கு மேலாக, இந்தத் தெருக்களில் வசிப்போருக்கு, கரோனா தொற்று உறுதி செய்யப்படாவிட்டால், தனிமைப்படுத்தப்பட்ட தெருக்கள் பட்டியிலில் இருந்து விடுவிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, 379 தெருக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 72 தெருக்களும், திருவிக நகா் மண்டலத்தில் 67 தெருக்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.