நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தூத்துக்குடியில் கரோனாவில் இருந்து மீண்ட 8 பேர் வீடு திரும்பினர்

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 8 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பினர்.தூத்துக்குடி அரசு ம

News image
Updated On :25 மே 2020, 12:00 pm

DIN

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 8 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பினர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்டு 113 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் கோவில்பட்டியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் குணமடைந்தனர். அவர்களுக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில் முழுமையாகக் குணமடைந்து தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்களை இன்று வீட்டிற்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில்  மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டு அவர்களுக்குப் பழங்கள் வழங்கி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 160 பேர் கரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 53 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில்105 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2 பேர் தொற்றுக்கு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.