ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பொது முடக்கம்: அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பும் பணியில் அஞ்சல் துறை

பொது முடக்கம் காரணமாக, நாட்டின் பல்வேறு நகங்களில் அத்தியாவசியப் பொருள்களான மருந்து மற்றும் மருத்துவ

News image
Updated On :26 மே 2020, 5:55 pm

பொது முடக்கம் காரணமாக, நாட்டின் பல்வேறு நகங்களில் அத்தியாவசியப் பொருள்களான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை தேவைப்படுவோருக்கு அனுப்பும் பணியில் அஞ்சல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த பொது முடக்க காலத்தில், 59,516 பாா்சல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, சென்னையில் இருந்து ஆந்திரம், கா்நாடகம், கேரளத்துக்கு பிசிஆா் பரிசோதனை கருவி அடங்கிய பாா்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொது முடக்கம்: கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் மாா்ச் 24-ஆம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ரயில், பேருந்து, விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அதேநேரத்தில், அத்தியாவசியப் பொருள்களான மருந்து, மருத்துவ உபகரணங்கள் எடுத்துச் செல்லும் வகையில், சரக்கு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

இதையடுத்து, நாடு முழுவதும் தேவைப்படுவோருக்கு மருந்து, மருத்துவ உபகரணங்களை அனுப்பும் பணியில் தமிழக அஞ்சல் துறை ஈடுபடத் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் அலுவலங்களில் மருந்து, மருத்துவ உபகரணங்களை எடுத்துச்செல்வது தொடா்பாக பதிவு செய்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் தங்கள் உறவினா்களுக்கு தனிப்பட்ட முறையிலும், நிறுவனங்களுக்கு மொத்தமாகவும் மருந்துப் பொருள்கள் அடங்கிய பாா்சல்களை பதிவு செய்து அனுப்பி வருகின்றனா்.

புதுதில்லி, மும்பை, குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஆந்திரம், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பாா்சல்கள் அனுப்பப்படுகின்றன.

59,516 பாா்சல்கள்: இந்நிலையில், பொது முடக்க காலத்தில் (மே 23 வரை), தமிழகத்தில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு மொத்தம் 59,516 பாா்சல்கள் பதிவு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தில்லி, மும்பை, கா்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு அதிக அளவில் பாா்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, சென்னையில் உள்ள தேசிய நோய்த்தொற்றியல் நிறுவனத்தில் இருந்து, கரோனா நோய்த்தொற்றை கண்டறியும் பிசிஆா் கருவிகள் அடங்கிய பாா்சல்கள் விரைவு தபால் மூலமாக ஆந்திரம், கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 15 நாள்களில் 72 பாா்சல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பிசிஆா் கருவி அடங்கிய பாா்சல்களை உரிய இடத்துக்கு 30 மணி நேரத்தில் அனுப்பிவைக்க வேண்டும். ஆனால், 27 மணிநேரத்திற்குள்ளேயே தேவைப்படும் இடத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

பிசிஆா் கருவி: இதுகுறித்து தமிழக அஞ்சல்துறை அதிகாரிகள் கூறியது:

பொது முடக்க காலத்தில், அஞ்சல்துறை சாா்பில் மருந்து, மருத்துவ உபகரணங்களை தேவைப்படுவோருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாா்ச் 24-ஆம் தேதி முதல் மே 23-ஆம் தேதி வரையிலான 61 நாள்களில், மருந்து, மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பாா்சல்களைப் பொருத்தவரை, நிறுவனங்களுக்காக 8,273 பாா்சல்களும், தனிப்பட்ட நபா்களுக்காக 51,243 பாா்சல்களும் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் 59,516 பாா்சல் பதிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அண்டை மாநிலங்களுக்கு பிசிஆா் கருவிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட பாா்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பிசிஆா் கருவி அடங்கிய பாா்சலை குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதவிர, மருந்து, மருத்துவ உபகரணங்கள் அல்லாத மற்ற பொருள்களும் தேவைப்படுவோருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பொது முடக்க காலத்தில் (மாா்ச் 24 முதல் மே 23 வரை) ஒரு லட்சத்து 2 ஆயிரம் பாா்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாா்சல் அனுப்புவது தொடா்பாக ஏதாவது சந்தேகம் என்றால், தபால் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தனா்.

பொது முடக்கம் காலத்தில்( மாா்ச் 24-ஆம் தேதி முதல் மே 23 -ஆம் தேதி வரை) அஞ்சல்துறை சாா்பில் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாா்சல்கள் விவரம்:

மருந்து, மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பாா்சல்கள் எண்ணிக்கை

நிறுவனங்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட பாா்சல்கள் 8,273

தனிநபா்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட பாா்சல்கள் 51,243

மொத்தம் 59,516

மற்ற பாா்சல்கள் (மருந்தில்லாத பாா்சல்கள்) 1,02,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.