திருவள்ளூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியைத் தொடங்கி வைத்தார் ஆட்சியர்

திருவள்ளூர் அருகே அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள்கள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கரோனா..
திருவள்ளூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியைத் தொடங்கி வைத்தார் ஆட்சியர்

திருவள்ளூர் அருகே அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள்கள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு, அதைத்தொடர்ந்து பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணியை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்றோடு 62 நாள்களாக பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கியதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதற்கிடையே கரோனா பாதிப்பு காரணமாக பிளஸ் 2, பிளஸ்1 தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் தாமதமாகி வந்த நிலையில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

திருவள்ளூர் அருகே போளிவாக்கத்தில் உள்ள விஸ்வக்சேனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள்கள் திருத்தும் மையத்தில் கிருமி நாசினி தெளித்தல் போன்ற கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடுவோர் எந்த நேரமும் முகக்கவகம் அணியவும் வலியுறுத்தினார். பின்னர் பிளஸ்2 விடைத்தாள்களை முதுகலை பட்டதாரி ஆசிரியர்களிடம் அளித்துத் திருத்தும் பணியை அவர் தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடர்ந்து ஜூன் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல், பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 10-இல் தொடங்கி, தொடர்ந்து 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையே விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருவள்ளூர் அருகே உள்ள விஸ்வக்சேனா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மட்டும் 400 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், சில்ட்ரன்ஸ் பாரடைஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி பொன்னேரி அருகே செங்குன்றம், வேலம்மாள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி அம்பத்தூர் அருகே சூரப்பட்டு, ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செங்குன்றம், கெங்குசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திருத்தணி, சரஸ்வதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கள்ளிக்குப்பம், சேதுபாஸ்கர மேல் நிலைப் பள்ளி அம்பத்தூர் ஆகிய மையங்களிலும் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 7 மையங்களிலும் இப்பணியில் முதன்மைத் தேர்வர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர், கூர்ந்தாய்வாளர் என 2,290 பேர் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முகாம் அலுவலர் கற்பகம், நேர்முக உதவியாளர் திருவரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com