டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருக்குவளையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் ஒன்றிணைந்து விவசாயிகள் பெற்ற வேளான் கடன்களை

News image
Updated On :27 மே 2020, 10:58 am

DIN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் ஒன்றிணைந்து விவசாயிகள் பெற்ற வேளான் கடன்களை தள்ளுபடி செய்து குறுவை சாகுபடிக்கு நிபந்தனையின்றி கடன் வழங்கிடக் கோரி மற்றும் இன்சூரன்ஸ் உடனடியாக வழங்கிடக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டமானது திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை  11 மணியளவில் சமூக இடைவெளியின் படி நடைபெற்றது.

இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய தலைவர் ஏ.செல்லையன் மற்றும் ஒன்றிய செயலாளர் கே.சீனிவாசன் தலைமை வகித்தனர். முன்னதாக போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூர் ஒன்றிய செயலாளர் டி.செல்வம் துவங்கி வைத்தார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பெற்ற வேளாண் கடன் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.குறுவை சாகுபடிக்கு நிபந்தனையின்றி பயிர்க்கடன் வழங்கிட வேண்டும். 

மின்சார சட்டம் 2020ஐ திரும்பப்பெற வேண்டும். குடிமராத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளை ஊழல் முறைகேடு இன்றி நிறைவேற்ற வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத்துறையோடு இணைத்ததைக் கைவிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோசங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் இறுதியாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அவர்களுடைய கோரிக்கை மனு ஒன்றை வட்டாட்சியர் சாந்தியிடம் அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.