முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னை மாதவரம் அருகே கொசப்பூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை மாதவரம் அருகே கொசப்பூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினரும் வழக்குரைஞருமான எம்.நாராயணன் தாக்கல் செய்த மனுவில், சென்னை மாதவரத்தை அடுத்த கொசப்பூரில் எனக்குச் சொந்தமான நிலத்தில் திமுக மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் மார்பளவு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க திட்டமிடப்பட்து. சிலைதிறப்பு விழாவுக்கு அனுமதி கோரி கடந்த ஆகஸ்ட் 27 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் காவல்துறை மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தேன்.
அந்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தனக்குச் சொந்தமான நிலத்தில் சிலைகளை வைத்துக் கொள்வது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தமிழக அரசு தரப்பில், தனி நபரின் பட்டா நிலத்தில் சிலை வைத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தாலும், மாநில அரசிடம் முறையாக அனுமதி பெறாமல் சிலை வைக்க கூடாது என ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கபப்ட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழக அரசின் அரசாணை மற்றும் சிலை திறக்க அனுமதிப்பது தொடர்பாக வரும் நவம்பர் 26-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...