தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

விழுப்புரத்தில் மின் ஊழியர்கள் கூட்டமைப்பு மாநிலம் தழுவிய ஒரு நாள் போராட்டம்

விழுப்புரத்தில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில், மின்வாரியம் தனியார்மயத்தை கண்டித்தும், தொழிலாளர் விரோத போக்கை தொடர்ந்து வரும் மின் வாரியத் தலைவரை மாற்ற வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய போரா

News image
விழுப்புரத்தில்மின் ஊழியர்கள் போராட்டம்
Updated On :4 நவம்பர் 2020, 7:03 am

DIN

விழுப்புரத்தில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில், மின்வாரியம் தனியார்மயத்தை கண்டித்தும், தொழிலாளர் விரோத போக்கை தொடர்ந்து வரும் மின் வாரியத் தலைவரை மாற்ற வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்திற்கு மின்வாரிய தொழிற்சங்க தொமுச மண்டல தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.

 சிஐடியு மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தொடங்கி வைத்தார். மின்வாரிய சிஐடியு மண்டலத் தலைவர் அம்பிகாபதி மற்றும் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த மின் வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள், மின் ஊழியர்கள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மின் வாரியத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்கை மேற்கொண்டுவரும் தமிழக மின் வாரிய தலைவரை மாற்றம் செய்யக் கோரியும் தர்ணா போராட்டத்தில் வலியுறுத்தினர்.

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து , ஒரு நாள் நடைபெறும் இப் போராட்டத்தில் மின் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.