/

நாமக்கல்லில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு

2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் நாமக்கல் வருகை தந்து கட்சியினரிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

News image
நாமக்கல்லில் திமுக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு
Updated On :5 நவம்பர் 2020, 6:12 am

DIN


நாமக்கல்: 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் நாமக்கல் வருகை தந்து கட்சியினரிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

2021 ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளது. இதற்காக அக்கட்சியின் பொருளாளரும், மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலு தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன், அந்தியூர் செல்வராஜ் மற்றும் முன்னாள் மக்களவை உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் மாவட்ட வாரியாக சென்று அங்குள்ள பிரச்னைகள் குறித்து கட்சியினரிடம் கேட்டறிந்து வருகின்றனர். 

Story image

நாமக்கல்லில் தகவல் கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள்.

அதன்படி, வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் நாமக்கல் வருகை புரிந்தனர். நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள நளா உணவகத்தில் நடைபெற்ற தகவல் கேட்பு கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி ஆகியோர் தேர்தல் அறிக்கை குழுவை வரவேற்று தொகுதி சார்ந்த பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தனர். 

நாமக்கல்,  திருச்செங்கோடு, சேந்தமங்கலம், கொல்லிமலை, பரமத்தி வேலூர், மோகனூர், குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்களது சுற்றுவட்டாரப் பகுதிக்கு தேவையான திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இக்கூட்டமானது மதியம் 12 மணி வரை நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.