/

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

News image
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
Updated On :27 ஜனவரி 2024, 5:48 pm

DIN

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்கள் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்  என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டுக்குரியது!  

ஆன்லைன் சூதாட்டத்தடை பல குடும்பங்களை பாதுகாக்கும் ; நடுத்தெருவுக்கு வருவதைத் தடுக்கும். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து  தற்கொலை செய்து கொண்ட  ஏராளமான இளைஞர்களின்  மரணத்திற்கு நீதி வழங்குவதாக அமையும்!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக  4 ஆண்டுகளுக்கும் மேலாக நான் குரல் கொடுத்து வருகிறேன். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அரசின் முடிவு மனநிறைவளிக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றி!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டான ரம்மி குறித்து பல்வேறு புகார்கள்கள் வந்து கொண்டு இருக்கின்றன என்றும் இந்த விளையாட்டை தடை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.