அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ இடஒதுக்கீடு: நீதிமன்றத்தில் முறையீடு
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஒன்றரை மாதத்திற்குப் பின்னர் ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதனால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைப்பது உறுதி ஆகியுள்ளது.
இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் பினேகாஸ் என்பவர், நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்திஅமர்விடம் வலியுறுத்தினார்.
மேலும், அரசுப் பள்ளி இல்லாத பல இடங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகள்தான் இருக்கின்றன என்றும் இங்கும் ஏராளமான ஏழை மாணவர்கள் படிப்பதால் அவர்களுக்கும் அரசு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரினார்.
இதையடுத்து, முறைப்படி மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இது தொடர்பான வழக்கின் விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...