/

மேட்டூர் வட்டாரத்தில் சாரல்: மக்கள் மகிழ்ச்சி

மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

News image
மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை
Updated On :27 ஜனவரி 2024, 5:48 pm

DIN

மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையான வெப்பம் நிலவியது.  வெப்பம் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பகல் 12 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது.

YouTube video thumbnail

கொளத்தூர், மேட்டூர், புதுச்சாம்பள்ளி உள்ளிட்ட மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக சாலையில் சிறிது நேரம் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் தடுமாறிச் சென்றனர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த மழையின் காரணமாக பகலில் நிலவிய கடுமையான வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.