பெட்ரோல் குழாய் பதிக்கும் திட்டம்: ஈரோடு அருகே கோரிக்கை மாநாடு தொடங்கியது
பெட்ரோல் குழாய் பதிக்கும் திட்டத்தைக் கண்டித்து ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே கோரிக்கை மாநாடு தொடங்கியது.


ஈரோடு: பெட்ரோல் குழாய் பதிக்கும் திட்டத்தைக் கண்டித்து ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே கோரிக்கை மாநாடு தொடங்கியது.
கோவை மாவட்டம் இருகூர் பகுதியில் இருந்து பெங்களூர் அருகே உள்ள தேனவ குந்தி வரை பெட்ரோலியம் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டத்தை (ஐ.டி.பி.எல்) பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்துக்காக விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி உள்பட 6 மாவட்ட விவசாயிகளை பாதிக்கும் இந்த திட்டத்தை சாலை வழியாக செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஐ டி பி எல் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டும் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தக் கோரிக்கையை 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தல் அறிக்கை அறிவிப்பாக முக்கிய கூட்டணி கட்சிகள் வெளியிட்டு இந்த பிரச்னைக்கு முடிவு காணும் வகையில் கோரிக்கை மாநாடு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இந்த கோரிக்கை மாநாடு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஆவரங்காட்டு வலசு பகுதியில் இன்று தொடங்கியது.
ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் காசியண்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் முனுசாமி வரவேற்றார். திமுக சார்பில் துணைப்பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, திருப்பூர் எம்.பி. சுப்பராயன், சேலம் எம்.பி. பார்த்திபன், தனியரசு எம்எல்ஏ உள்பட முக்கியமான அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஐ.டி.பி.எல். திட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பேசி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...