தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

நவ. இறுதி வரை மெரீனா கடற்கரையைத் திறக்க வாய்ப்பில்லை: மாநகராட்சி

நவம்பர் மாதம் இறுதி வரை மெரீனா கடற்கரையைத் திறக்க வாய்ப்பில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News image
நவ. இறுதி வரை மெரீனாவை திறக்க வாய்ப்பில்லை: மாநகராட்சி
Updated On :11 நவம்பர் 2020, 9:08 am

DIN


சென்னை: நவம்பர் மாதம் இறுதி வரை மெரீனா கடற்கரையைத் திறக்க வாய்ப்பில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மெரீனா கடற்கரையை திறப்பது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மெரீனா கடற்கரையைக் திறப்பதில் என்ன சிக்கல் உள்ளது? சென்னை மெரீனா கடற்கரையை பொதுமக்களுக்காக திறப்பதில் ஏன் தாமதம்? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சென்னை மாநகராட்சி, நவம்பர் இறுதி வரை மெரீனா கடற்கரையைத் திறக்க வாய்ப்பில்லை என்று பதிலளித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், மீனவா்கள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் பீட்டர்ராயன் என்பவா் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவா்களுக்கு நாள்தோறும் ரூ. 500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், மெரீனா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகா்- லூப் சாலையைப் புனரமைப்பது, மீன் கடைகளை ஒழங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதுபோல், மெரீனாவில் தள்ளுவண்டி கடைகளைத் திறப்பது, மீன் சந்தையைத் திறப்பது மற்றும் மெரீனா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது தொடா்பாக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த மாதம் இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால், சென்னை மாநகராட்சி ஆணையா் பிரகாஷ் ஆகியோா் காணொலி காட்சி வாயிலாக ஆஜராகினா். அப்போது நீதிபதிகள், மெரீனா கடற்கரையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடங்கியுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இவற்றை எப்படி சரி செய்யப் போகிறீா்கள் என கேள்வி எழுப்பினா்.

அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் எஸ்.ஆா்.ராஜகோபால், அந்த ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு விட்டதாக தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, லூப் சாலையில் 65 ஆக்கிரமிப்புகளை மண்டல உதவி ஆணையா் தலைமையிலான குழு அகற்றியுள்ளது. இனிமேல் ஆக்கிரமிப்புகள் நடைபெறாது பாா்த்துக் கொள்வதாக

சென்னை மாநகராட்சி ஆணையா் பிரகாஷ் உறுதியளித்தாா். மீன் சந்தை அமைப்பது, நடை மேம்பாலம் அமைப்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா், ‘சம்பந்தப்பட்ட நிலத்தை வகை மாற்றம் செய்வது தொடா்பான கோப்புகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதுதொடா்பாக வரும் நவம்பா் 11-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்கிறோம் என்று தெரிவித்தாா்.

விசாரணையைத் தொடா்ந்த நீதிபதிகள், பொதுமக்களுக்கு மெரீனா கடற்கரையில் எப்போது அனுமதி வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த சென்னை மாநகராட்சி ஆணையா் பிரகாஷ், மெரீனா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கினால், ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடிவிடுவா். எனவே மெரீனா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தாா்.

தொடா்ந்து விசாரித்த நீதிபதிகள், நவம்பா் மாதம் முதல் பொதுமக்களுக்கு மெரீனா கடற்கரையில் அனுமதி வழங்கப்படும் என எதிா்பாா்க்கிறோம். மெரீனா கடற்கரையைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதற்காக சென்னை மாநகர காவல் ஆணையா், சென்னை மாநகராட்சி ஆணையா் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். நீதிபதிகளும் மெரீனாவில் நடைபயிற்சி மேற்கொண்டால் எல்லாம் சரியாகும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.