மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உடனடி கடன் தரும் செயலிகளிடம் உஷார்: எச்சரிக்கும் காவல்துறை

உடனடியாக கடன் தருவதாகக் கூறி குறுந்தகவல்கள் அனுப்பும் செல்லிடப்பேசி செயலிகளிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2020, 12:54 pm

DIN


உடனடியாக கடன் தருவதாகக் கூறி குறுந்தகவல்கள் அனுப்பும் செல்லிடப்பேசி செயலிகளிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

செல்லிடப்பேசி செயலிகள் சில, உடனடியாக கடன் தருவதாகக் கூறி குறுந்தகவல்களை அனுப்புகின்றன. அதை நம்பி சிறிய தொகைதானே என்று கடன் வாங்க நினைக்கும், நபர்களுக்கு உதாரணமாக ரூ.5000 கடன் தொகை கேட்டால், கடன் அளிக்க செயல்பாட்டுக் கட்டணம் என்று ரூ.1,500 பிடித்தம் செய்து வெறும் ரூ.3500 வரவு வைக்கப்படுகிறது. அதனை திரும்ப செலுத்த தாமதமாகும் பட்சத்தில், வட்டி, வட்டிக்கு வட்டி என்று கடன் வாங்கியவரை செயலிகள் மிரட்டத் தொடங்குகின்றன. அதுமட்டுமல்ல, கடன் வாங்கியவரின் செல்லிடப்பேசியில் இருக்கும் தொடர்பு எண்களையும் தொடர்பு கொண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, செல்லிடப்பேசி செயலிகளிடம் கவனமாக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்துகிறார்கள்.

இது குறித்து விருதுநகர் மாவட்ட காவல்துறை வெளியிட்டிருக்கும் சுட்டுரைப் பதிவில், உடனடி லோன் தருவதாகக் கூறி உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் போலி மொபைல் போன் அப்ளிகேஷன்கள்.

போலி மொபைல் போன் லோன் அப்ளிகேஷன்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி உங்களை மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.