டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வெள்ளக்கோவில் வட்டமலை அணை விவசாயிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் 

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், உத்தமபாளையம் வட்டமலைக் கரை ஓடை அணை விவசாயிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படுமென நீராதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
வட்டமலைக் கரை ஓடை அணை
Updated On :13 நவம்பர் 2020, 8:35 am

DIN

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், உத்தமபாளையம் வட்டமலைக் கரை ஓடை அணை விவசாயிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படுமென நீராதாரத் துறை தெரிவித்துள்ளது.

நீராதாரம் இல்லாத இடத்தில் வட்டமலைக் கரை ஓடை அணை கட்டப்பட்டதால், கடந்த 30 வருடங்களாக அணை வறண்டே கிடக்கிறது. அரசாணை 84-ன் படி பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனக் கால்வாயில் இருந்து அணைக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும். அணைக்கு அருகிலுள்ள அமராவதி ஆற்று உபரி நீரைக் கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து போராடி வருகின்றனர். 

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது போக, உபரி நீர் இருக்கும் பட்சத்தில் பரிசீலனை செய்யப்படும். தாராபுரம் அமராவதி அணைக்கட்டிலிருந்து நீரை கிராவிட்டி ஸ்கீம் மூலம் கொண்டு வரவும், ஆண்டிபாளையம் தடுப்பணையில் இருந்து லிப்ட் இரிகேஷன் மூலம் கொண்டு வரும் கோரிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என ஈரோடு கோட்ட பொதுப்பணித்துறை நீராதார செயற்பொறியாளர் கே.எம்.விஜயா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.