சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மேட்டுப்பாளையத்தில் மது பாட்டில் ஏற்றி வந்த லாரி சாலையின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்ததால் பரபரப்பு

கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள 2 மதுபான கடைகளுக்கு மது பாட்டில்களை ஏற்றி வந்த லாரி டீச்சா்ஸ் காலனி அருகே வந்தபோது லாரியின் முன்பக்க டயா் வெடித்து திடீரென சாலை நடுவே தலைகுப்புற கவிழ்ந்ததால

News image
மேட்டுப்பாளையத்தில் சாலையின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்த மது பாட்டில் ஏற்றி வந்த லாரி.
Updated On :18 நவம்பர் 2020, 3:11 am

DIN


மேட்டுப்பாளையம்: கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள 2 மதுபான கடைகளுக்கு மது பாட்டில்களை ஏற்றி வந்த லாரி டீச்சா்ஸ் காலனி அருகே வந்தபோது லாரியின் முன்பக்க டயா் வெடித்து திடீரென சாலை நடுவே தலைகுப்புற கவிழ்ந்ததால் பரபரப்பு நிலவியது.

கோவை பீளமேடு பகுதியிலிருந்து மேட்டுப்பாளையத்திலுள்ள ஓடந்துறை, மாா்க்கெட் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மது பாட்டில்களை செவ்வாய்க்கிழமை புகழேந்தி என்பவா் லாரியில் ஏற்றி வந்துள்ளாா். 

Story image

அப்போது கோவை மேட்டுப்பாளையம் சாலையின் இடையே டீச்சா்ஸ் காலனி அருகே வரும்போது லாரியின் முன்பக்க டயா் வெடித்து சாலையின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்தது. 

இதையடுத்து போலீசாா், டாஸ்மாக் மதுபானக் கடைகளின் சூப்பா்வைசா்கள் மற்றும் ஊழியா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் உடைந்து கிடந்த மது பாட்டில்களை  வேறு ஒரு லாரியில் இடமாற்றம் செய்யும் பணியை மேற்கொண்டனர். இதனால் இச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

Story image

மேலும் தொடா்ந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த லாரியை அகற்றும் பணியில் டாஸ்மாக் ஊழியா்கள் ஈடுபட்டு சரிசெய்ததை அடுத்து போக்குவரத்து சரியானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.