விநாயகர் கோவிலை இடிக்க எதிர்ப்பு: கீதாஜீவன் எம்எல்ஏ மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
தூத்துக்குடியில் விநாயகர் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டததால் அங்கு பரபரப்பு நிலவியது.


தூத்துக்குடி: தூத்துக்குடியில் விநாயகர் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டததால் அங்கு பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஸ்டேட் பாங்க் காலனி 60 அடி சாலையில் உள்ள பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வரும் போது அங்கு உள்ள சிறிய அளவிலான விநாயகர் கோவிலை இடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிமை காலை ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
பின்னர் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...