முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தமிழகத்தில் இருப்பது என்றும் மகிழ்ச்சியே: அமித் ஷா

தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் தமிழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
தமிழகத்தில் இருப்பது என்றும் மகிழ்ச்சியே: அமித் ஷா
Updated On :21 நவம்பர் 2020, 10:56 am

DIN


சென்னை: தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் தமிழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பிற்பகலில் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அமித் ஷாவை, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

புகைப்படங்களைப் பார்க்க.. சென்னை வந்தார் அமித் ஷா 

சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த உள்துறை அமைச்சருக்கு பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் இணைந்து வரவேற்பளித்தனர்.

சென்னை விமான நிலையத்திலிருந்து நட்சத்திர விடுதிக்கு காரில் சென்று கொண்டிருந்த அமித் ஷா, சாலையின் இருபக்கமும் நின்றிருந்த தொண்டர்களைப் பார்த்ததும், காரிலிருந்து இறங்கி, சாலையில் நடந்தபடி, தன்னை வரவேற்க நின்றிருந்தவர்களுக்கு கைகளை அசைத்தும், வணக்கம் தெரிவித்தும் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

பிறகு காரில் ஏறி சென்னையிலுள்ள நட்சத்திர விடுதிக்குச் சென்றார். 

இந்த நிலையில், அவரது சுட்டுரைப் பக்கத்தில் சென்னை வருகை தொடர்பான புகைப்படங்கள் பதிவிடப்பட்டு, சென்னை வந்தடைந்தேன்!

தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர, சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.