சென்னையில் மழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் நேற்று மாலை முதல் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், இன்று காலை நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.


சென்னையில் நேற்று மாலை முதல் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதால், இன்று காலை நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
சென்னை விமான நிலையத்துக்கு வெளியே, போக்குவரத்து நெரிசல் காரணமாக நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் நின்றிருந்தன.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெல்ல ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

தாம்பரம் முதல் கிண்டி வரை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக, வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். அலுவலகம் செல்வோர் சிரமத்துக்கு உள்ளாகினர்.
வழக்கமாக காலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளிலும், மழை காரணமாக நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில், அம்பத்தூர், பெரம்பூர், கொரட்டூர், அயனாவரம், பழவந்தாங்கல், கோவிலம்பாக்கம், கோயம்பேடு, போரூர், பெருங்களத்தூர், வில்லிவாக்கம், நெற்குன்றம், சிட்லப்பாக்கம், குன்றத்தூர் என சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக இன்று காலை மழை பெய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...