உருவானது நிவர் புயல்: சென்னையில் பரவலாக மழை
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.


சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கன மழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னையில், அம்பத்தூர், பெரம்பூர், கொரட்டூர், அயனாவரம், பழவந்தாங்கல், கோவிலம்பாக்கம், கோயம்பேடு, போரூர், பெருங்களத்தூர், வில்லிவாக்கம், நெற்குன்றம், சிட்லப்பாக்கம், குன்றத்தூர் என சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...