வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

'நிவர்' தீவிர புயலாக புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்கும்: சென்னை வானிலை மையம்

தென்மேற்கு வங்கக் கடலில் புயலாக வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் நிவர் புயலானது புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
'நிவர்' தீவிர புயலாக புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்கும்: சென்னை வானிலை மையம்
Updated On :24 நவம்பர் 2020, 9:34 am

DIN


சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் புயலாக வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் நிவர் புயலானது புதுச்சேரிக்கு அருகே நாளை பிற்பகலில் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், வங்கக் கடலில் சென்னையிலிருந்து 450 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 410 கி.மீ. தொலைவிலும், நிவர் புயலானது கடந்த 3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. புயலின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் நகரும் வேகத்திலும் மாற்றம் உண்டாவது வழக்கமானதுதான்.

நேற்று பகலில் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, நள்ளிரவில் மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. கடந்த 3 மணி நேரமாக ஒரேயிடத்தில் நீடிக்கிறது.

புயல் சின்னமானது நிலப்பகுதியை அணுகும்போது, அதன் வேகம் குறைவது இயல்பானதுதான். வேகம் குறைந்தாலும், அது வலுப்பெறுவதில் மாற்றமில்லை. தற்போதைய கணிப்பின்படி அது புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கும்.

நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் நிலையில், திருவண்ணாமலை, புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், காரைக்கால் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை அதீத கனமழைபெய்யக் கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, திருவாரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகை  உள்ளிட்ட மாவட்டங்களில் மணிக்கு 110 கி.மீ. வேகம் வரை காற்று வீசக் கூடும்.

நாளை புயல் கரையை கடக்கம் போது செங்கல்ட்டு  விழுப்புரம் கடலூரில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். கடலோரப் பகுதிகளில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 120 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக் கூடும்.

திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மணிக்கு 80 -  90 கி.மீ. வேகத்திலும், சிலசமயம் 100 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக் கூடும்.

நாளை பிற்பகல் முதல்  கடல் அலை வழக்கமான உயரத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். தமிழக கடற்கரையைப் பொருத்தவரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.