வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை; ஆந்திரத்துக்கு சிவப்பு எச்சரிக்கை

நிவர் புயல் கரையைக் கடந்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் நகர்ந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களுக்கும், ராயலசீமாவுக்கு சிவப்பு எச்சர

News image
தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை; ஆந்திரத்துக்கு சிவப்பு எச்சரிக்கை
Updated On :26 நவம்பர் 2020, 9:06 am

DIN


சென்னை: நிவர் புயல் கரையைக் கடந்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் நகர்ந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களுக்கும், ராயலசீமாவுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் கரையைக் கடந்து தரைப் பகுதியில் நகர்ந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தின் வட உள் மாவட்டங்களான ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் அதி தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கனமழையும், அதி கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே நிலையில் ராயலசீமா பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.