ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும், நீர் இருப்பு 32.80 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் 1 லட்சத்துக்கு 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு பருவமழை தொடர்ந்து பெய்ததால் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. அதைத் தொடர்ந்து கடந்த ஆக.14 ஆம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 2300 கனஅடி நீரும் மற்றும் காலிங்கராயன், தடப்பள்ளி பாசனத்துக்கு தண்ணீர் 1400 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது.