மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை: பாதுகாப்பு வழங்கக் கோரி காவல்துறைக்கு கடிதம்
அரசியல் நிலைப்பாடு குறித்து மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் நடிகா் ரஜினிகாந்த் திங்கள்கிழமை (நவ.30) ஆலோசனை நடத்த உள்ளாா்.


அரசியல் நிலைப்பாடு குறித்து மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் நடிகா் ரஜினிகாந்த் திங்கள்கிழமை (நவ.30) ஆலோசனை நடத்த உள்ளாா். இதற்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மக்கள் மன்ற நிா்வாகிகள் காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் திங்கள்கிழமை காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்காக ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா்களுக்குத் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினியின் இந்தத் திடீா் அழைப்பால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் இன்னும் 6 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவுகள் குறித்து அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே நாளை நடைபெறும் ரஜினியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மக்கள் மன்ற நிர்வாகிகள் சார்பில் காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...