
சென்னையின் நீர் ஆதாரமாகவுள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டுள்ளது.
நிவர் புயல் தாக்கத்தால் பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவான 24 அடியில் 22 அடியை எட்டியதால் கடந்த 25-ஆம் தேதி முதல் நீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
ஏரிக்கு வரும் நீர்வரத்துக்கேற்ப வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது நீர் வரத்து முற்றிலும் குறைந்ததால், நீர் திறப்பை மூட முடிவு செய்யப்பட்டது.
எனினும் நீர் வெளியேற்றப்படும் மதகில் சகதி, செடிகள் சிக்கிக் கொண்டதால் நீர் திறந்துவிடுவதில் சிக்கல் ஏற்ட்டிருந்தது
மதகை அடைப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து இல்லாதபோதிலும் 320 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் மதகில் இருந்த சகதி மற்றும் செடிகள் நீக்கப்பட்டு மதகு மூடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.