தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெரியபாளையம் அருகே தனியார் கிடங்கில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அடிப்படை உரிமைகளை கேட்கும் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதாக பெரியபாளையம் அருகே தனியார் கிடங்கில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News image

பெரியபாளையம் அருகே தனியார் கிடங்கில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Updated On :29 நவம்பர் 2020, 11:10 am

DIN

அடிப்படை உரிமைகளை கேட்கும் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதாக பெரியபாளையம் அருகே தனியார் கிடங்கில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான சேமிப்பு கிடங்கு உள்ளது. உணவுப் பொருள்கள், சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இந்த கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிரந்தர பணியாளர்களாகவும், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்தம் அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர்.

இந்தக் கிடங்கில் அடிப்படை உரிமைகள் கேட்கும் தொழிலாளர்கள் திருட்டு பழி சுமத்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் இதனைக் கண்டித்து கடந்த 21ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு உணவு கொண்டு செல்ல நிர்வாகம் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து கிடங்கு வாயிலில் சிஐடியு தொழிற்சங்கத்தினருடன் இணைந்து தொழிலாளர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்கள் மீது பழி சுமத்துவதை நிறுத்திக் கொண்டு தொழிலாளர் நல ஆணையரின் அறிவுரைகளை நிர்வாகம் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை கேட்கும் தொழிலாளர்களையும் பணி நீக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீண்டும் அவர்களை பணியில் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.  

தொடர்ந்து காவல்துறையினர், தொழிற்சங்கத்தினர் நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 30ஆம் தேதி தொழிலாளர் நல ஆணையர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு பிரச்சனையை தீர்ப்பதாக நிர்வாகம் உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.