கம்பம்: கேரள மாநிலத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக தேனி மாவட்டத்திற்கு சரக்கு வாகனம் மூலம் லாட்டரி சீட்டுகள் கடத்த முயன்றதை கம்பம்மெட்டு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் திருட்டுத்தனமாக விற்கப்படுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் இ.சாய்சரண்தேஜஸ்விக்கு தகவல் கிடைத்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கம்பம்மெட்டு வழியாக தேனி மாவட்டத்தை நோக்கி ஒரு சரக்கு வாகனம் வந்தது.
கம்பம் மெட்டு சோதனைச் சாவடியில் கேரள மாநில கலால் பிரிவு அதிகாரிகள் வாகனத்தை சோதனை செய்தனர்.
அதில் குப்பையில் வீசப்படும் கழிவுப் பொருட்கள் மூடைகளுடன் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் பண்டல் பண்டலாக அடுக்கிவைத்து கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
இதுதடர்பாக ஓட்டுநர் மற்றும் மற்றொருவரையும் விசாரித்து வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் பல லட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ளவை என்றும், தேனி மாவட்டத்திற்கு யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்றும் விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லோயா்கேம்ப் குடிநீா் வடிகால் வாரிய அலுவலக வளாகத்தில் தீ வைப்பு: மா்ம நபா் தலைமறைவு

ஒரே தொகுதியில் 4- ஆவது முறையாக களம் காணும் ஓ.பி.எஸ்.

ஒரே தொகுதியில் 5-ஆவது முறையாக களம் காணும் அமைச்சா்

கொல்லங்குடி காளியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


