கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

தமிழகத்தில் புதிதாக 5,017 பேருக்கு கரோனா; 5,548 பேர் குணம்

தமிழகத்தில் இன்று புதிதாக 5,017 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில்  71 பேர் பலியாகியுள்ளனர்.

News image
தமிழகத்தில் புதிதாக 5,017 பேருக்கு கரோனா; 5,548 பேர் குணம்
Updated On :6 அக்டோபர் 2020, 12:50 pm

DIN


சென்னை: சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5,017 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில்  71 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பரவத் தொடங்கிய பிறகு, 39வது நாளாக தொடர்ந்து ஆறு ஆயிரத்துக்கும் கீழ் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய நாளில் 45,279 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

தமிழகத்தைச் சேர்ந்த 5,014 பேருக்கும், வெளிமாநிலத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 3,088 பேர் ஆண்கள், 1,929 பேர் பெண்கள்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 1,306 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 13-ஆவது நாளாக ஆயிரத்துக்கும் மேல் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,75,484 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களை விட அதிகமாக 5,548 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6.25 லட்சத்தில் இருந்து 6.30 லட்சமாக உயர்ந்துள்ளது. கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 9,917 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் கரோனா பாதித்தவர்களில் இதுவரை 5,75,212 பேர் குணமடைந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.