சிவகாசியில் முடிதிருத்துவோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சிவகாசியில் அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்றக் கழகம் சிவகாசி வட்ட கிளை சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


சிவகாசியில் அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்றக் கழகம் சிவகாசி வட்ட கிளை சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலையாளி விடுதலை செய்யப்பட்டதை கண்டித்தும் இந்த வழக்கினை அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் தென்மண்டல அமைப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 80 பேர் கலந்து கொண்டனர். இதனையொட்டி சிவகாசி வட்டத்திலுள்ள 210 முடிதிருத்தும் கடைகளில் 110 கடைகள் மூடப்பட்டு இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...