புது தில்லி: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69 லட்சத்து 79 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 73,272 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 926 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,07,416 ஆக அதிகரித்துவிட்டது. இது மொத்த கரோனா பாதிப்பில் 1.54 சதவீதமாகும்.
புதிதாக 73,272 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த கரோனா பாதிப்பு 69,79,424 ஆக அதிகரித்துவிட்டது. எனினும், இதுவரை 59,88,823 போ் கரோனா தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனா். ஒரே நாளில் 82,753 பேர் தொற்றில் இருந்து விடுப்பட்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் 85.81 சதவீதமாகும். இப்போதைய நிலையில் 8,83,185 போ் நாட்டில் கரோனா பாதிப்புடன் உள்ளனா். இது 12.65 சதவீதமாகும். சுமாா் ஒரு மாதத்துக்குப் பிறகு நாட்டில் கரோனா தொற்றுடன் இருப்போா் எண்ணிக்கை 9 லட்சத்துக்குகீழ் குறைந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 39,732 போ் கரோனாவால் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 9,789 பேரும், ஆந்திர மாநிலத்தில் 6,159 பேரும், தில்லியில் 5,692 பேரும் கரோனாவால் பலியாகினா்.
தொற்று பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. ஆந்திரம் இரண்டாவது இடத்திலும், கர்நாடகம் மூன்றாவது இடத்திலும், தமிழ்நாடு நான்காவது இடத்திலும் இருந்து வருகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி அக்டோபா் 8-ஆம் தேதி வரை 8,46,34,680 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சனிக்கிழமை மட்டும் 11,64,018 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்
ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: ஓடிடியில் எப்போது?

தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


