குஷ்பு விலகியதால் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை: கே.எஸ்.அழகிரி
காங்கிரஸில் இருந்து குஷ்பு விலகியதால் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை என தமிழாக்கி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
காங்கிரஸில் இருந்து குஷ்பு விலகியதால் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை என தமிழாக்கி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;
கட்சியின் கருத்துக்கு எதிராகவும், கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அறிக்கைகளுக்கு எதிராகவும் குஷ்பு பல கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
கட்சியின் கருத்துகளில் முரண்பாடு இருக்குமேயானால் கட்சிக்குள் பேசித் தீர்க்க வேண்டும் என்று நாங்கள் பலமுறை கூறியிருக்கிறோம், அதையும் மீறி அவர் அவ்வாறு செய்வது அரசியலில் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. அவருக்கு அகில இந்திய செய்தித் தொடர்பாளர் என்று உயர்ந்த பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதனை அவர் சரியாக பயன்படுத்த தவறிவிட்டார்.
குஷ்புவை காங்கிரஸ் தொண்டர்கள் நடிகையாகத்தான் பார்த்தார்களே தவிர, தலைவராக பார்க்கவில்லை. காங்கிரஸில் அவர் தாமரை இலை மேல் தண்ணீர் போலத்தான் இருந்தார். அவருக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் தான் இருந்தார். அவரது பேரம் பாஜகவில் எடுபட்டதாக தெரியவில்லை. பாஜகவினரின் அழைப்புக்காக அவர்தான் காத்திருக்கிறார் என்று பேசினார்.
முன்னதாக, கட்சியின் மீது சில காலம் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படும் குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று அறிவித்தார். மேலும், கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பிய என்னைப் போன்றவர்களை காங்கிரஸ் கட்சியில் உயர்பதவியில் உள்ள சிலர் ஒடுக்குகின்றனர் என்றும் இதுகுறித்து அவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடிகை குஷ்பு, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...