முதல்வர் பழனிசாமி தாய் மறைவு; ஓ. பன்னீர்செல்வம் தொலைபேசியில் ஆறுதல்
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் தாய் மறைவையொட்டி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொலைபேசி வாயிலாக முதல்வரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.


சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் தாய் மறைவையொட்டி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொலைபேசி வாயிலாக முதல்வரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியின் தாய் தவுசாயம்மாள் உடல்நலக் குறைவால் சேலத்தில் காலமானார். அவரது உடல் தகனம் சிலுவம்பாளையம் இடுகாட்டில் இன்று காலை நடைபெற்றது. அமைச்சர்கள், அதிமுகவினர், கிராம மக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் பழனிசாமியின் தாய் மறைவையொட்டி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். அவர் பிற்பகலில் சிலுவம்பாளையம் கிராமத்துக்கு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் முதல்வர் பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...