மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேட்டூர் அணை: நீர்வரத்து 27,212  கன அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக  இன்று மாலைக்குள் மீண்டும் 100 அடியாக உயரும் வாய்ப்பு உள்ளது.

News image
மேட்டூர் அணை
Updated On :13 அக்டோபர் 2020, 5:36 am

DIN

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக  இன்று மாலைக்குள் மீண்டும் 100 அடியாக உயரும் வாய்ப்பு உள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 26,102கன அடியிலிருந்து 27,212 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளதால் நேற்று காலை 99.11அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.90 அடியாக உயர்ந்துள்ளது.

நீர்வரத்தும் பிறப்பும் இதே நிலையில் இருந்தால் இன்று மாலைக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் 100 அடியாக உயரும் வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்தால் அணை நிரம்பும். அணையின் முழு கொள்ளளவு 93.45 டி.எம்.சியாகும்

நீர்மட்டம்   : 99.90 அடி.
நீர்இருப்பு :  64.71  டி.எம்.சி. 
நீர் வரத்து : வினாடிக்கு 26,102 கன அடியிலிருந்து 27212  கன அடியாக     அதிகரித்துள்ளது.  
வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 14,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.