மேட்டூர் அணை நீர்மட்டம்: 2-வது முறையாக 100 அடியை எட்டியது
மேட்டூர் அணையில் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.


மேட்டூர் அணையில் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை பெய்தது. மழையின் காரணமாக கபினி கிருஷ்ணராஜசாகர் நிரம்பி அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டது. உபரி நீர்வரத்து காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்வரத்து காரணமாக செப்டம்பர் 7-ம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு சீராக இருந்த காரணத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 308 நாள்களாக 100 அடிக்கு கீழே குறையாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் ஜூன் 12-ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் ஜூன் 16-ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழே சரிந்தது. தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாக மளமளவென அணையின் நீர்மட்டம் சரிந்து வந்த நிலையில் மீண்டும் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டில் மழை பெய்ய தொடங்கியது.
அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி அணைகளின் பாதுகாப்பு கருதி நடப்பாண்டில் உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. உபரி நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து செப்டம்பர் 25-ஆம் தேதி நடப்பு ஆண்டில் முதல் முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்தது.
ஒரே நாளில் மீண்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது. கடந்த வாரத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கடந்த 3 நாள்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 27,212 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 99.90 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீரும் திறக்கப்பட்டு வந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் இன்று நண்பகலில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 100 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் நடப்பு நீர்பாசன ஆண்டில் பாசனத்திற்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கும் என்று காவிரி டெல்டா விவசாயிகளும் மீன் வளம் பெருகும் என்று மேட்டூர் அணை மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...