தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மணப்பாறை அருகே குடிநீருக்காக மக்கள் மறியல், போக்குவரத்து பாதிப்பு

மணப்பாறை அருகே குடிநீருக்காக மணப்பாறை - புதுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது.

News image
மணப்பாறை அருகே குடிநீருக்காக மணப்பாறை - புதுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.
Updated On :14 அக்டோபர் 2020, 6:48 am

DIN

மணப்பாறை அருகே குடிநீருக்காக மணப்பாறை - புதுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார்நகர் பகுதியில் கடந்த சில நாள்களாக பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் முறையாக நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதால் ஆத்திரமடைந்த அப்பகுதினர் முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று புதன்கிழமை காலை மணப்பாறை - புதுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் அவ்வழி சாலை போக்குவரத்து  முழுவதும் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த நகராட்சி நிர்வாகிகள், காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி  குடிநீர் விநியோகத்தை உடனடியாக சீர்செய்து தருவதாக உறுதி கூறினார், அதனைத்தொடர்ந்து  போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.