உசிலம்பட்டி அருகே மதுக் கடையை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு
உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி டாஸ்மாக் மதுக் கடையை உடைத்து 10 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்றனர்.


உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி டாஸ்மாக் மதுக் கடையை உடைத்து 10 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்றனர்.
குப்பணம்பட்டி டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசர் பாலச்சந்திரன், விற்பனையாளர் பால்பாண்டி ஆகியோர் நேற்று இரவு விற்பனை முடித்து கடையை மூடி சென்றனர். வழக்கம்போல் வியாழக்கிழமை காலை பணிக்கு வந்தபோது டாஸ்மாக்கின் கிரில் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக வரவழைக்கப்பட்டுள்ள கைரேகை நிபுணர்கள் டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்து வருகின்றனர். சுமார் பத்தாயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உசிலம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...