ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவிற்கு டி.டி.வி.தினகரன் இரங்கல்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமமுக பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல் மறைவிற்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்
Updated On :15 அக்டோபர் 2020, 2:18 pm

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமமுக பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல் மறைவிற்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரான வெற்றிவேல்  கடந்த சில நாள்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் இருந்ததால் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டாா். அதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

வெற்றிவேலின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் வெண்டிலேட்டா் உதவியுடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை மாலை காலமானார்.

இதனைத் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “ வெற்றிவேலின் மறைவு செய்தியால் மிகுந்த வேதனையையும் சொல்லமுடியாத துயரமும் தொண்டையை அடைக்கிறது. அவரின் மறைவு கட்சிக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தாருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.