மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சீர்காழியில் 1 பைசாவுக்கு பிரியாணி; குவிந்த அசைவப் பிரியர்கள்!

சீர்காழியில் புதிய கடை திறப்பு விழாவையொட்டி,  1 பைசாவுக்கு பிரியாணி வழங்கியதால் அசைவ பிரியர்கள் குவிந்தனர்.

News image
சீர்காழியில் 1 பைசாவுக்கு பிரியாணி வழங்கிய கடையில் குவிந்த அசைவ பிரியர்கள்
Updated On :18 அக்டோபர் 2020, 11:02 am

DIN

சீர்காழியில் புதிய கடை திறப்பு விழாவையொட்டி,  1 பைசாவுக்கு பிரியாணி வழங்கியதால் அசைவ பிரியர்கள் குவிந்தனர்.

சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே இன்று புதிதாக பிரியாணி கடை திறப்பு விழா நடந்தது. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களை கவரும் விதமாக அதிரடி ஆபர்களை கடை நிர்வாகத்தினர்  அறிவித்து துண்டு பிரசுரம் வெளியிட்டனர்.

Story image

அதன்படி, பழைய 1 பைசா, 2, 3, 5, 10, 20 பைசாக்களை கொடுத்து சிக்கன் பிரியாணி காம்போ வாங்கிச் செல்லலாம் என அறிவித்தனர். முதல் 300 நபர்களுக்கு முகக்கவசம் இலவசமாகவும் தரப்படும் எனவும், செப்டம்பர் 18-ல் பிறந்த பெண்களுக்கு  இலவசமாகவும் பிரியாணி வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். 

இவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதையடுத்து கடை திறப்பு விழா அன்று, அசைவப் பிரியர்கள் பழைய பைசாக்களுடன் திரண்டனர். முகக்கவசம் அணிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அசைவ பிரியாணியை வாங்கிச் சென்றனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்த காவலர் ஒருவரும் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். புரட்டாசி மாதம் முடிந்த அடுத்த நாளே இதுபோன்ற ஆஃபர் வந்ததால் அசைவப் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர் .

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.