இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

7.5% உள்ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க 3 அல்லது 4 வார அவகாசம் தேவை: ஆளுநர் பதில்

மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க 3 அல்லது 4 வார கால அவகாசம் தேவை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு தமிழக ஆளுநர் பதிலளித்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

News image
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
Updated On :22 அக்டோபர் 2020, 3:21 pm

DIN

மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க 3 அல்லது 4 வார கால அவகாசம் தேவை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு தமிழக ஆளுநர் பதிலளித்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் 7.5% உள்ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க 3 அல்லது 4 வார கால அவகாசம் தேவைப்படுவதாக தமிழக ஆளுநர் பதிலளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், “நீட் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதா குறித்து அனைத்துக்கோணங்களிலும் கலந்தாலோசனை  நடத்தி வருகிறேன். இதுகுறித்து முடிவு எடுக்க எனக்கு 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படுகிறது.” என்று ஆளுநர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தினால் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் தருவதாக தன்னை சந்திக்க வந்த தமிழக அமைச்சர்களிடம் ஆளுநர் தெரிவித்ததாகவும் செய்திகள் உலவுவதாக திமுக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.