மத்தியப் பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் சேர்க்கை ஆரம்பம்

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள சமுதாயக் கல்லூரியில் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது.
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக நுழைவுவாயில்
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக நுழைவுவாயில்

நன்னிலம்: திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள சமுதாயக் கல்லூரியில் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது.

இதுசம்பந்தமாக சமுதாயக் கல்லூரியின் பொறுப்பு அலுவலர் டாக்டர் பிஎஸ்.வேல்முருகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் சமுதாயக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில், சரக்கு மற்றும் சேவை வரி, முதலீட்டு மேலாண்மை, கணினி மூலம் கணக்கியல் பயிற்சி, தொழில் முனைவோர் பயிற்சி, இயற்கை வேளாண்மை போன்ற சான்றிதழ் படிப்புகளுக்கும், குறும்படம் மற்றும் காணொளித் தயாரிப்பு பட்டயப்படிப்புக்கான சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி தேவை. பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படும். இந்த படிப்புகளுக்கான சேர்க்கை நவம்பர் 30ம் தேதி முடிவுறும். எனவே, ஆர்வமுள்ள இளைஞர்கள் இணைந்து பயன்பெற வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com