கிருஷ்ணகிரியில் மரக்கன்றுகள் நடும் பணி:  ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரி புதூர் ஏரி கரையில் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் வி ஜெயச்சந்திர பானு ரெட்டி தொடங்கி வைத்தார். 

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதூர் ஏரி கரையில் 500 மரக்கன்றுகள் நடும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி ஜெயச்சந்திர பானு ரெட்டி தொடங்கி வைத்தார். 

கிருஷ்ணகிரியில் ஒளிரும் கிருஷ்ணகிரி பவுண்டேஷன் "நமது ஊர் நமது பெருமை" என்ற தலைப்பில் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி புதூர் ஏரி கரையில் 500 மரக்கன்றுகள் நடும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி ஜெயச்சந்திர பானு ரெட்டி தொடங்கி வைத்தார். 

இந்த ஏரியில் செண்பகம், வேம்பு, ஆலம், பாதாம் என பல வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. 

இந்த நிகழ்ச்சியில் உதவி வன பாதுகாப்பு அலுவலர் ஜெகதீஷ் எஸ். பக்கான், வனச்சரகர் சக்திவேல், ஒளிரும் கிருஷ்ணகிரி பவுண்டேஷனின் நிர்வாகிகள் சிவகுமார், ஆனந்த் குமார், ரங்கநாதன் லாரன்ஸ், பாண்டுரங்கன், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com