பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

துரைமுருகன், டி.ஆர்.பாலுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

திமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் மற்றும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
நடிகர் ரஜினி
Updated On :3 செப்டம்பர் 2020, 3:16 pm

DIN

திமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் மற்றும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் இன்று மாலை 4 மணியுடன் முடிந்த நிலையில், திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆா்.பாலுவும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

பொதுச்செயலாளா், பொருளாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக திமுகவின் பொதுக்குழு செப்டம்பா் 9-ஆம் தேதி கூட உள்ளது.

இந்நிலையில் திமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படும் துரைமுருகன் மற்றும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்படும் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது சுட்டுரைப்பதிவில் நடிகர் ரஜினிகாந்த்,   “தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு.துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு.டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.” எனப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.