குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

செப். 7 முதல் சென்னையில் இருந்து கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை சென்டிரல் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து செப்டம்பர் 7-ம் தேதி முதல் கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
செப். 7 முதல் சென்னையில் இருந்து கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்
Updated On :3 செப்டம்பர் 2020, 12:09 pm

DIN


சென்னை: சென்னை சென்டிரல் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து செப்டம்பர் 7-ம் தேதி முதல் கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கூடுதலாக 6 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே அமைச்சகத்துக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்று, செப்டம்பர் 7-ம் தேதி முதல் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து 4 சிறப்பு ரயில்களும், சென்னை எழும்பூரில் இருந்து 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை - மதுரை, சென்னை -  கோவை,  சென்னை - குமரி, சென்னை - தூத்துக்குடி, சென்னை - மேட்டுப்பாளையத்துக்கு ரயில்கள் இயக்கப்படும் என்றும், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை மற்றும் செங்கோட்டைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சென்னை - மதுரை இடையே பாண்டியன் விரைவு ரயிலும், சென்னை - கோவை இடையே சேரன் விரைவு ரயிலும், கன்னியாகுமரி விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், நீலகிரி விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.