ஆசிரியர்கள் அறிவாற்றல் படைத்த சிறந்த மனிதர்களாகவும், கற்பிப்பதை நேசிப்பவர்களாகவும் இருத்தல் மிகமிக அவசியமானதாகும். இந்த இரு பண்புகளும் கல்வியின் தரத்தை மேம்படுத்தும். நல்ல ஆசிரியர்களால், சிறந்த ஒழுக்கம் கொண்ட, கைதேர்ந்த திறமையுடைய, அறிவாற்றல் பெற்ற மனிதர்களை உருவாக்கித்தர முடியும். ஆசிரியர்கள், மாணவர்களின் கனவுகளை நினைவாக்கிட, அவர்களுக்குள் பொதிந்திருக்கும் சிந்தனைத் திறனை ஊக்குவித்து, அறிவாற்றலை மேம்படையச் செய்திட முடியும் என்று நம்புகின்றேன். இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் மனித வரலாற்றில் தனி முத்திரையைப் பதித்திட முடியும்.