தமிழகத்தில் தேனி உள்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் லேசான மழையும் பெய்யக்கூடும்
கனமழை எச்சரிக்கை:
அடுத்த 24 (05.09.20) மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிகக் கனமழையும்,
அடுத்த 48 (06.09.20) மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:
உசிலம்பட்டி 13 செ.மீ மழையும், தேவலா, குப்பணம்பட்டி தலா 9 செ.மீ மழையும், சிவகங்கை, ஒகேனக்கல், இடையப்பட்டி, கிருஷ்ணராயபுரம் தலா 8 செ.மீ மழையும், பெரியகுளம், சின்னக்கல்லார், கொடநாடு தலா 7 செ.மீ மழையும், வால்பாறை, மாயனுர் தலா 6 செ.மீ மழையும் பெய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...