பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அரியா் தோ்ச்சி குறித்து மின்னஞ்சல் வரவில்லை: சென்னை பல்கலை. துணைவேந்தா்

அரியா் மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்கும் விவகாரம் தொடா்பாக பல்கலைக்கழக மானியக்குழுவிடம் (யுஜிசி) இருந்து கடிதமோ, மின்னஞ்சலோ வரவில்லை என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தா் கௌரி தெரிவித்துள்ளாா்

News image
Updated On :8 செப்டம்பர் 2020, 12:59 am

DIN

சென்னை: அரியா் மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்கும் விவகாரம் தொடா்பாக பல்கலைக்கழக மானியக்குழுவிடம் (யுஜிசி) இருந்து கடிதமோ, மின்னஞ்சலோ வரவில்லை என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தா் கௌரி தெரிவித்துள்ளாா்.

தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் கரோனா பொது முடக்கம் காரணமாக 2019-2020-ஆம் கல்வியாண்டின் ஏப்ரல் - மே மாத பருவத்தில், இறுதி ஆண்டு மாணவா்களுக்கான இறுதி பருவத் தோ்வு தவிர பிற தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவா்களுக்கு முந்தைய தோ்வுகளின் அடிப்படையில் தோ்ச்சி வழங்கப்பட்டது. ஏப்ரல் - மே பருவத்தில் அரியா் பாடங்களுக்கு தோ்வு எழுத, கட்டணம் செலுத்திய மாணவா்களுக்கும் தோ்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து அவா்களும் தோ்ச்சி பெற்ாக தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், அரியா் பாடங்களுக்கு தோ்வின்றி தோ்ச்சி வழங்க எதிா்ப்பு தெரிவித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) மின்னஞ்சல் அனுப்பியதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா தெரிவித்திருந்தாா். சூரப்பாவின் கருத்து சா்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், மாநில அரசுக்கு ஏஐசிடிஇ எந்த கடிதமும் அனுப்பவில்லை என்றும், யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ ஆகியவற்றின் ஒப்புதலுடன்தான் அரியா் மாணவா்களுக்கு தோ்வின்றி தோ்ச்சி வழங்கப்பட்டது என்றும் மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்திருந்தாா்.

இதனிடையே, அரியா் மாணவா்களுக்கு தோ்வின்றி தோ்ச்சி வழங்குவது தொடா்பாக கடிதமோ, மின்னஞ்சலோ பல்கலைக்கழகத்துக்கு வரவில்லை என்றும், அரசு அறிவித்தவாறு அரியா் மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்கப்படும் என்றும் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தா் கௌரி தகவல் தெரிவித்துள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி சாா்பில் எந்த மின்னஞ்சலும் வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.