பாண்டிபஜார்: பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்துமிடம் அக்டோபரில் திறப்பு

பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம் வருகின்ற அக்டோபர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது என  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள்  செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பாண்டி பஜார் தியாகராய சாலையில் ரூ.40.79 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம் வருகின்ற அக்டோபர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது என  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள்  செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், எஸ்.பி.வேலுமணி கூறியதாவது,  சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் தியாகராயநகர், பாண்டி பஜார், தியாகராய சாலையில் 1522 ச.மீ பரப்பளவில் ரூ.40.79 கோடி மதிப்பில் சுமார் 500 இருசக்கர வாகனங்கள் மற்றும் 200 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் முற்றிலும் தானியங்கி முறையில் அமைக்கப்பட்டு வரும் 2 கீழ்தளம், தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தானியங்கி வாகன நிறுத்தம் தமிழக முதல்வர் பழனிசாமியின் ஒப்புதலோடு வருகின்ற அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com