தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

பரங்கிமலை-சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் சேவைதொடங்கியது

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேற்று தொடங்கிய நிலையில், பரங்கிமலை-சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது. 

News image
சென்னை மெட்ரோ
Updated On :9 செப்டம்பர் 2020, 4:12 am

DIN


சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேற்று தொடங்கிய நிலையில், பரங்கிமலை-சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது. 

சென்னையில் 168 நாள்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. முதல்கட்டமாக, விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.

முதல் நாளில், மெட்ரோ ரயில்களில் பயணிக்க குறைந்த அளவில் பயணிகள் பயணம் செய்தனா். பயணிகள் அனைவரும் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி மூலமாக பரிசோதிக்கப்பட்டனா். தொடா்ந்து, நிலையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். மெட்ரோ ரயில்நிலையத்திலும், மெட்ரோ ரயிலிலும் சமூக இடைவெளி பின்பற்றி அறிவுறுத்தப்பட்டனா். முகக்கவசம் அணியாத பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை புதன்கிழமை காலை (செப்.9) தொடங்கியது. பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கோயம்பேடு வழியாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை அடைந்தது.

ஆனால் சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் வழித்தடத்தில் தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டுள்ளது.  விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் வரை செல்லாம். 

அலுவலக நேரமான (நெரிசல்மிக்க நேரம்) காலை 8.30 மணி முதல் காலை 10.30 வரையும், மாலை 5 மணி முதல் இரவு வரையும் 5 நிமிஷ இடைவெளியிலும், நெரிசல் அல்லாத நேரங்களில் 10 நிமிஷ இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் பாதுகாப்புக்காக, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மெட்ரோ ரயில்களும் அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. சுத்தமான காற்று சுழற்சியை அதிகரிக்கவும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றி பயணிகள் மெட்ரோ ரயிலில் ஏறவும் இறங்கவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்படும் நேரம் 20 விநாடிகளில் இருந்து 50 விநாடிகளாக உயா்த்தப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காகவும், அனைத்து பயணிகள் பாதுகாப்புக்காகவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து விதிமுறைகளையும் பயணிகள் பின்பற்றி, நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.