தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பலகோடி ரூபாய் மதிப்புடைய ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது தொடர்பாக 42 ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புடைய தொன்மையான ஐம்பொன்னால் செய்யப்பட்ட தியாகராஜர் சுவாமி சிலை, இரு அம்பாள் சிலைகள் ஆகியவை கடந்த 1978 ஆம் ஆண்டுக்கு முன்பு திருட்டு போனது.
இந்நிலையில், கோயிலின் செயல் அலுவலர் அசோக்குமார் புதன்கிழமை கொடுத்த புகாரின் பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் இயக்குநர்அபய்குமார் சிங் உத்தரவுப்படி, காவல் துறைத் தலைவர் அன்பு வழிகாட்டுதலின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருட்டு போன சிலைகளை கண்டுபிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆக்ஸட் 1 ஆம் தேதி தில்லியில் இ20க்கு எதிராக ஆம் ஆத்மி ஆா்ப்பாட்டம்: அரவிந்த் கேஜரிவால்

காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை!

முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு! விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ பிணை: விசாரணை ஒத்திவைப்பு

தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பே முதன்மை இலக்கு: எஸ்.பி. இரா. சிவ பிரசாத்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


